Reuters இணையப் பயிற்சி: டிஜிட்டல் ஊடகவியலுக்கான அறிமுகம்

டிஜிட்டல் ஊடகத் தளங்கள் ஒவ்வோர் ஆண்டும் மேலும் வலிமையாகவும் பிரபலமாகவும் வளர்ச்சியடையும் போது, சிறந்த ஊடகவியல் முன்னெப்போதையும் விட மிக முக்கியமாகும். இப்போது, செய்தி மையங்கள் புதிய கதைகளைக் கண்டறிந்து வெளியிடுவது மட்டுமல்லாமல், எப்போதும் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உதவியோடு உலகெங்கிலும் உள்ள பாமர ஊடகர்கள் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிற டிஜிட்டல் வழிகளில் கதைகளை வெளியிட முடிகிறது. ஒவ்வோர் ஆண்டும் கடக்கும் போது பொதுமக்கள் செய்திகளைப் பெறும் வழிகள் உருமாறிக்கொண்டே இருக்கின்றன.

உங்கள் சான்றைத் தொடர்க

ஏன் டிஜிட்டல் ஊடகவியல்?

பொறுப்புடனும், நெறிமுறையுடனும் உறுதிசெய்தபிறகும் எவ்வாறு செய்திவெளியிடுவது என்பதைத் தெரிந்துகொள்வது ஊடகர்களுக்கு முக்கியமாகும். பல செல்வாக்குமிக்க ஊடகவியல் ஆய்வுகள் உலகளாவிய செய்திகளைத் தெரிந்துகொள்ள விரும்பும் நுகர்வோர் ஆழ்ந்த, நடுநிலையான, நெறிகெடாத தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்கன் பிரஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆய்வு ஒன்று "அதிகத் தகவல்கள் நம்மை உண்மைக்கு அருகில் இட்டுச்செல்கின்றன' என்பதை 67% அமெரிக்கர்கள் நம்புகிறார்கள்" என்று கண்டறிந்தது. கூடுதலாக, ஊடகவியல் ஆய்வுக்காக Reuters இன்ஸ்ட்டிடியூட் தயாரித்த சமீபத்திய டிஜிட்டல் செய்தி அறிக்கை, உலக அளவில் கருத்தாய்வு செய்யப்பட்ட பாதிக்கும் மேலானோர் செய்தி என வரும்போது இணைத்தில் உள்ளவை சரியா அல்லது தவறா என்கிற கவலை இருப்பதாகத் தெரிவித்தனர் என்று கண்டறிந்தது. "நீண்ட கால உய்வுத்திறன் ஆன்லைனில் பார்வையாளர்களுடன் வலுவான மற்றும் ஆழமான தொடர்பை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை வெளியீட்டாளர்கள் அதிக அளவில் உணர்ந்து வருகின்றனர்" என DNR ஆய்வு மேலும் சுட்டிக்காட்டுகிறது.

தேர்ச்சிச் சான்றிதழ்

இந்த இரண்டு மணி நேரப் பயிற்சி டிஜிட்டல் ஊடகவியலின் சிறந்த நடைமுறைகளைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகம் செய்கிறது. வலிந்துரைக்கும் படங்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகளைப் பயன்படுத்தி, டிஜிட்டல் செய்திச் சேகரிப்பு, உறுதிசெய்தல் மற்றும் செய்தி வெளியிடுவது, சமூக ஊடகங்களில் திறம்பட வெளியிடுதல் மற்றும் ஆரோக்கியம் மற்றும் மீள்திறம் ஆகியவற்றைக் கையாளும் நான்கு தொகுதிகளில் மதிப்புமிக்க நுண்ணறிவை இந்தப் பாடக்கோப்பு வழங்குகிறது. இரண்டு மணி நேரப் பயிற்சியை முடித்தபிறகு பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் தேர்ச்சிச் சான்றிதழைப் பெறுவார்கள்.